அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசி, மரக்கறி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரித கதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ 90-100 ரூபா வரையிலும், தரமான சம்பா அரிசி ஒரு கிலோ 120 முதல் 145 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
சீனியின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றது. ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 120 மதல் 125 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் சீனிக்கு 30 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மரக்கறி வகைகளின் விலைகளும் அண்மைக் காலமாக உயர்வடைந்து செல்வதனால் மக்கள் மரக்கறி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளனர்.