அத்தியாவசிய பொருட்களான தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
இதன்படி தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோகிராம் 130 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளது.
வாழ்க்கைச் செலவுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, இந்த உணவு பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.