Breaking
Thu. Nov 14th, 2024
அநுராதபுரத்தை மீண்டும் இலங்கையின்  தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கூடிய பொதுமக்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க உறுப்பினர்களான சுனில் ஜயரத்ன, தெனிய ஹூருல்லே, நதீகா தமயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் முதலில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றின் உறுப்பினர் பியதாச பத்திரண, அரச சேவையில் இருந்து ஓய்வுபெறுவோர் பிரதிபலன்களை பெற்றுக்கொள்வதில் தற்போதைய அரசியலமைப்பு தடையாக இருப்பதாக கூறியுள்ளார்.
இங்கு தனது கருத்துகளை முன்வைத்த பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப பேவந்தர் பேராசிரியர் சீ.எம். மத்துமபண்டார, கொழும்பு நகரை வணிக நகரமாக மாற்றிவிட்டு, அநுராதபுரத்தை அடுத்த தலைநகரமாக மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, ஆயிரத்து 500 வருடங்களாக அநுராதபுரமே நாட்டின் தலைநகராக இருந்து வந்ததாக வரலாறு  குறிப்பிடுகின்றது.

By

Related Post