Breaking
Wed. Mar 19th, 2025
அநுராதபுரம் நகரில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 பேர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வசந்த சொய்சா என்ற என்ற களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்ததாக கூறப்படும் இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் உட்பட 35 பேருக்கு எதிராக காவற்துறையினர் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அநுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலங்சூரிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே காவற்துறையினர் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

சந்தேக நபர்கள் அணிந்திருந்த முகமூடிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறும், தாக்குதலுக்கு பயன்படுத்தி பொல்லுங்களை பேராதனை தாவரவியல் பூங்கா அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்ட வசந்த சொய்சா, ஒரு கராத்தே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post