அநுராதபுரத்திலுள்ள திசா வாவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த வாவியில் பொதுமக்கள் குளிப்பதால் நீரானது அசுத்தமடைவதாக திசா வாவியை பாதுகாக்கும் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக நன்றாக ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக டீ.பீ.ஜி.குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அறிவிப்பினால் வாவியை அண்மித்து வசிப்போர் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனினும் அவர்களுக்கு மாற்று திட்டம் ஒன்று ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் நகரசபை மற்றும் நீர் வழங்கல் சபையிடம் அறிக்கையினை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.