Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வௌியான தகவல் தவறு என, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களை இலக்கு வைத்து எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன.

இதன்படி எல்லை தாண்டியதாக கூறப்படும் 12 மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் இவர்கள் பயணித்த படகுகளும் கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன மறுத்துள்ளார்.ad

Related Post