நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தகாத வார்த்தைகளால் எசியமை, நான் தெரியாமல் செய்த தவறாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தை திடீரென வந்துவிட்டது.
எவ்வாறாயினும், நான் அதை தெரிந்தே சொல்லவில்லை’ என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார கூறினார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய வாசுதேவ, ‘தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் வீழ்த்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்று உருவாக்கப்படும்’ என்றார்.
சு.க அரசாங்கத்தின் கீழ், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பொதுத் தேர்தலொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வாசுதேவ நாணாயக்கார, இதன்போது மேலும் கூறினார்.