Breaking
Sun. Dec 22nd, 2024

வெளிநாட்டில் வேலை செய்வோரினால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 வீதத்தில் அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 523.50 மில்லியன் அமெரிக்க டொலாராக இருந்த அந்நிய செலாவணி இந்த ஆண்டு 563.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 58,726 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர். இவர்களில் 38,677 ஆண்களும் 20,049 பெண்களும் அடங்குவர்.

அந்நிய செலாவணிக்குரிய பணத்தை இந்நாட்டு வங்கிகளினூடாக வைப்பிலிடுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள மேற்கொண்ட நடவடிக்கை இதற்கு நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post