Breaking
Sun. Dec 22nd, 2024

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன.

கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் சேதமடைந்தோ அல்லது காணாமல் போயிருப்பின் அது குறித்து கிராம சேவகரிடம் உடனடியாக அறிவிக்குமாறு அமைச்சர் வஜிர அபேவர்தன கேட்டுக்கொண்டார்.

By

Related Post