Breaking
Mon. Mar 17th, 2025

மண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்புச் சம்பவம் ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கான காலத்தை இரண்டு மாதங்களாக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,

வாகனங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களும் தமது தவணைக் கட்டணங்களை இரண்டு மாதங்கள் காலம் தாமதமாகி செலுத்தலாம்.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமது மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களை ஒரு மாத காலம் தாமதமாகி செலுத்தலாம் என  அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post