Breaking
Thu. Dec 26th, 2024
பண்டுவஸ்நுவர தொகுதி அனுக்கன கிராமத்திற்க்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் கடந்த (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பொதுஜன பெரமுனையில் இருந்து புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற சகோதரர் ரியாதின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அதிகமான ஊர் இளைஞர்கள் கட்சியில் இனைந்து கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கினங்க குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டார கிளைகள் அமைக்கும் நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அனுக்கனயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், குளியாப்பிடிய பிரதேசசபை வேட்பாளர் ரஸீஸ், அமைச்சின் குருநாகல் மாவட்ட இனைப்பாளர் அலி மேகர், ஊர் இளைஞர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், புத்திஜீவிகள், ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post