Breaking
Wed. Mar 19th, 2025

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை வழங்குமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ்  அனுர சேனாநாயக்கவின் பிணை மனுவினை நிராகரித்ததை  தொடர்ந்து அதனை மேன்முறையீடு செய்யுமாறு கோரியே குறித்த மனுவினை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியொர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post