Breaking
Mon. Nov 25th, 2024

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று திங்­கட்­கி­ழமை அனைத்து கட்­சித்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.

இப்­பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறு­மய உட்­பட பிர­தான அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான இன்­றைய அர­சியல் கட்­சிகள் நடத்தும் பேச்­சு­வார்த்­தை­களின் பெறு­பே­றுகள் மற்றும் நேற்று (ஞாயிற்­றுக்­கி­ழமை) சிறு­பான்மை கட்­சிகள் உட்­பட சிறிய கட்­சி­க­ளுடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­க­மைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக தயா­ரிக்­கப்­படும் யோச­னைகள் எதிர்­வரும் 13ஆம் திகதி புதன்­கி­ழமை ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் முன்­ வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக பொது இணக்­கப்­பாடு காணப்­படா விட்டால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்­தவும் ஜனா­தி­பதி தீர்­மா­னித்­துள்ளார்.
தற்­போது உள்ள முறை­மை­யி­லேயே அப்­போது பொதுத்­தேர்தல் நடத்­தப்­ப­டு­மென்றும் ஜனா­தி­பதி முடி­வெ­டுத்­துள்ளார்.

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று கட்சித் தலை­வர்­க­ளுடன் இடம்­பெறும் கூட்­டமே பெரும்­பாலும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பான இறுதிக் கூட்­ட­மாக அமை­யலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஐ.தே. கட்­சியும் ஜே.வி.பி. யும் சுதந்­தி­ரக்­கட்­சியின் மஹிந்த அணி மற்றும் மைத்­தி­ரியின் சுதந்­தி­ரக்­கட்சி அணியும் பொதுத்­தேர்­தலை நடந்த வேண்­டு­மென்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

சுதந்­தி­ரக்­கட்­சியின் இரு அணி­களும் தேர்தல் முறைமை மாற்­றத்தின் பின்­னரே பொதுத்­தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி நின்­றாலும் ஜே.வி.பி. சிறு­பான்மை இன மற்றும் சிறிய கட்­சிகள் தற்­போ­துள்ள முறை­மை­யி­லேயே பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்றும் வலி­யு­றுத்தி வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வா­றா­னதோர் சூழ்நிலையில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக பொது இணக்கப்பாடு காணப்படாவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தற்போதைய தேர்தல் முறைமைக்கமைய பொதுத்தேர்தலை நடந்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post