அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி சேவைகளுக்காக நிறைவேற்றக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வெல்லம்பிடிய, மீதொட்டமுல்லை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் நலன்கள் குறித்து ஆராய, இன்று பகல் ஜனாதிபதி அங்குள்ள தற்காலிக முகாம்களுக்கு விஜயம் செய்தார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் கூறினர்.
விரைவாக இந்த விடயங்கள் குறித்து விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி, மேற்கொள்ளக் கூடிய உதவிகளை உரிய முறையில் செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.