Breaking
Fri. Nov 15th, 2024
இந்­நாட்டு முஸ்­லிம்கள் தமது முன்­னோர்­களால் பெற்றுத் தரப்­பட்ட உரி­மை­களைப் பாது­காத்துக்  கொள்­வதில் அர­சியல் மற்றும் பிரி­வு­களை மறந்து கை­கோர்க்க வேண்டும்.
கிடைத்­துள்ள உரி­மை­களைப் பறி­கொ­டுத்து விடாது  உள்­ளதைப் பாது­காத்துக் கொள்­வதில் நாம் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தலை­வ­ராக மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வரு­டாந்த மாநாடும் புதிய நிர்­வா­கிகள் தெரிவும் கண்டி லைன் பள்­ளி­வா­சலில் நடை­பெற்­றது. இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட 25 நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளினால் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலமே தலை­வ­ராக ரிஸ்வி முப்தி தெரிவு செய்­யப்­பட்டார்.
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலை­வ­ராக எதிர்­வரும் மூன்­றாண்டு காலத்­துக்கு மீண்டும் தெரி­வா­கி­யுள்ள ரிஸ்வி முப்தி ‘விடி­வெள்ளி’க்கு விஷேட பேட்­டி­யொன்­றினை வழங்­கினார். இந்தப் போட்­டியின் போதே அவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு முஸ்லிம் சமூ­கத்­துக்கு வேண்­டுகோள் விடுத்தார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­த­தா­வது
‘பல்­லின சமூ­கத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் நாம் ஏனைய சமூ­கங்­களின் உணர்­வு­க­ளையும் மதித்து எமது உரி­மை­களைப் பாது­காத்துக் கொண்டு கௌர­வ­மாக வாழ வேண்டும். திடீ­ரென ஏற்­படும் உணர்ச்­சி­க­ளுக்கு ஆட்­பட்­டு­வி­டாது நிதா­ன­மாக சிந்­தித்துச் செயற்­பட வேண்டும்.
நான் எமது மக்­க­ளிடம் மிகவும் அன்­பாக மேலும் ஒரு கோரிக்­கை­யையும் முன்­வைக்­கிறேன். உல­மாக்கள் சமு­தா­யத்தை வழி நடத்­து­ப­வர்கள். நல்­வ­ழியைப் போதிப்­ப­வர்கள். நீங்கள் உல­மாக்­களை நேசி­யுங்கள்.
அவர்கள் மீது அன்பு வையுங்கள். அவர்­களும் மனி­தர்­கள்தான். மன்­னிக்­கப்­ப­டக்­கூ­டிய மனித தவ­றுகள் அவர்கள் செய்­தி­ருந்தால் அவற்றை மன்­னி­யுங்கள். சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உல­மாக்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குங்கள்.
ஜம்­இய்­யாவில் 15 பிரி­வுகள் உள்­ளன. இந்த 15 பிரி­வு­க­ளான கத­வு­க­ளி­னூ­டாக உங்­க­ளுக்கு விருப்பமான விட­யங்­களில் இணைந்து சமூ­கத்­துக்குச் சேவை செய்­யுங்கள்.
நான் உல­மாக்­க­ளுக்கும் நாட்டின் அர­சாங்­கத்­துக்கும் துறைசார் நிபு­ணர்­க­ளுக்கும் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளுக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் தூதுவிடுக்கிறேன். இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நாம் நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம். சகவாழ்வுக்கு வழிசமைப்போம். எமது தாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார்.

By

Related Post