நாங்கள் இன்று சஜிதை ஆதரக்க முனைந்திருப்பது அவரது முழு மூச்சான சமூக சிந்தனைக்காவே தான்! சஜித் பிரேதாசவுடன் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளோம். அந்த சந்தர்ப்பத்தில் சிறுபாண்மைக்கு நீங்கள் தரும் உத்தரவாதம் என்னவென்று வினவிய வேளையில் அவர் கூறிய முதல் வார்த்தை ‘இந்நாட்டில் சிறுபாண்மை, பெரும்பாண்மை என்ற எண்ணமே வேண்டாம். இலங்கையர் என்ற வகையில் அனைவரும் சமம்’ என்பதாகும்.
இதுதான் சஜித்திடமுள்ள உயரிய பண்பு.
– இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் நேற்று நடாத்தப்பட்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவை ஆதரித்து இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளோம்.
அன்றைய காலகட்டத்தில் குடியிருப்புகளுக்கு வித்திட்டு எமது பிரதேசங்களிலுள்ள பின்தங்கிய பகுதிகளை வீடுகள் அமைத்துக் கொடுத்து அழகாக்கிய ஒரு மகாணின் மகனைத்தான் நாங்கள் இன்று ஆதரிக்கின்றோம்.
தொழில் வாய்ப்பில் இருந்த எத்தனையோ பேருக்கு தொழில் திட்டமொன்றை உருவாக்கி அதன் மூலம் பலருக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்த ரணசிங்க பிரேதாசவை இன்றும் எத்தனையோ உள்ளங்கள் நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக சம்மாந்துறைக்கு குடிநீர் வசதியை கொடுத்து தாகம் தீர்த்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச.
இப்படியெல்லாம் மக்களோடு மக்களாக அண்டிப் புழங்கிய பெரு மகனின் மகன் சஜித் பிரேமதாச தந்தை வழியில் தனக்குள் எவ்வித பாகுபாடுகளுமின்றி சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக அரவணைத்து வழிநாடத்திக் கொண்டிருக்கின்றமை வரவேற்புக்குரியதாகும்.
பெரும்பாண்மை சமூகத்தில் மாத்திரமல்லாது, சிறுபான்மை வாக்குகள் மூலமும் தனது வெற்றியை உறுதி செய்து எதிர்வரும் 17ஆம் திகதி அமோக வெற்றியை காணவுள்ள வேட்பாளர் சஜித் பிரேமதாச என்பது உறுதியானது.
அன்னத்தில் ஒரு அன்பும் அந்த சின்னத்தில் ஒரு அழகும் உள்ளது. இதன் ஒரு பங்காளியாக மயில் சின்னம் கொண்ட எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருப்பதிலும் எமது சமூகம் பெருமையடைகின்றது.
1977 இலேயே சம்மாந்துறைத் தொகுதி ஐ.தே.க.வுக்கு தனது ஆதரவை செம்மையாக வழங்கியது. மர்ஹ_ம் அப்துல் மஜீட் எம்.பி.யின் அரசியல் பிரவேசத்தினூடாக ஐ.தே.க.வின் இருப்பு சம்மாந்துறையில் காலூண்றியது காலத்தால் அழியாத சுவடு ஒன்றாகும்.
இவ்வாறு சமூக நல்லிணக்கமுள்ள எண்ணம் கொண்ட ஒரு தலைவரைத்தான் நாங்கள் தெரிவு செய்தோம். இன்று நாங்கள் எமது ஊரில் ஒரு கைத் தொழில் பேட்டையொன்றை உருவாக்க எவ்வளவோ முயற்சித்த போதும் அது தடைப்பட்டது.
ஆனால், சஜித் பிரேதாச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் ஒவ்வொரு கைத்தொழில் பேட்டை என்ற திட்டம் உள்வாங்கப்பட்டுள்ளது. இது தவிர வியாபாரம், தொழில் முயற்சிகள் என எத்தனையோ விடங்களையும் இவற்றுக்கு மேலதிகமாக எமது பிரதேச காணிப் பிணக்குகளை தீர்த்துத் தருவதற்காக தனியான ஆணைக்குழு ஒன்றை அமைத்து அவற்றினூடாக தீர்வைக் கொடுப்பேன் எனவும் வாக்குறுதியளித்திருக்கின்றார்.
35 இற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றபோதும் எமது கட்சியும், தலைமையும் சரியான தீர்மானமொன்றை எடுத்து சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளது.
எனவே, இந்த ஆதரவுக்கு ஆதரவுதர எமது சகோதரங்கள் அனைவரும் கைகோர்த்து எதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் சம்மாந்துறைத் தொகுதி அன்னச் சின்னத்திற்கு அளிக்கும் அதிகபடியான வாக்குகளால் அமோக வெற்றியின் பங்களிகளாக திகழ வேண்டும் என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும் – என்றார்.
– ஊடகப் பிரிவு.