பொது வேட்பாளரை ஆதரிக்கும் திருமலை மாவட்டத்துக்கான கூட்டம் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஏற்பாட்டில் நேற்று (28) காலை காங்கிரசின் திருமலை கோட்டை என கருதப்படும் புல்மோட்டையில் இடம்பெற்றது.இதில் இம்ரான் மகரூப்,முன்னால்அமைச்சர்களும் பாரளுமன்ற உறுப்பினர்க்களுமான ரிசாத் பதியுதீன்,குணவர்த்தன,மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி,லாபிர் ஹாஜியார் முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த கிண்ணியா நகர சபை எதிர்கட்சி தலைவர் ஹாரிஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி திருமலை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க காலநிலை சீர்கேடு காரணமாக கலந்து கொள்ளலாமல் இம்ரான் மகரூபின் தொலை பேசி வாயிலாக மக்களுடன் உரையாடினார்.
இக்கூட்டத்துக்கு காலநிலை சீர்கேடையும் பொருட்படுத்தாது புல்மோட்டை வரலாற்றில் என்றுமில்லாதளவு மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது
இங்கு உரையாற்றிய இம்ரான் மகரூப் இந்த அரசாங்கத்துக்கு என்றுமில்லாதளவுக்கு இப்போது மட்டும் மக்கள் மீது அதுவும் சிறுபான்மை மக்களின் மீது அக்கறை பிறந்துள்ளது.எமது பிரச்சனைகளை கண்டு நீலிக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது.மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் போது வரட்சி நிவாரணம் வழங்குகிறார்கள்.வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை கவனிக்க எந்த அரச அரசியல்வாதிகளுக்கும் நேரமில்லை.
புல்மோட்டை மக்கள் இந்த அரசின் ஆட்சியில் அனுபவிக்க கூடிய அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டார்கள்.இங்கு நிம்மதியாக கடலுக்கு செல்லமுடியாது.புல்மோட்டை அப்பாவி மக்களின் காணிகளை இராணுவமும் கடற்படையிலும் கைப்பற்றியுள்ளது.
எமது கருமலையூற்று பள்ளியையும் கைப்பற்றியிருந்தார்கள் பள்ளி உடைக்கப் பட்ட செய்தி அறிந்து உடனே ஊடகங்களை அழைத்து இப் பிரச்சனையை மக்களுக்கு தெரியப் படுத்தினேன்.அன்று சிலர் எதிர் கட்சி உறுப்பினர் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகிறார் என்றார்கள் .பின் உண்மையறிந்து மௌனமாகினர். மாகாண சபையில் இது தொடர்பாக சத்தமிட்ட போது அனைத்து மாகாண சபை உறுப்பினர்களையும் அங்கு அழைத்து செல்கிறோம் என்றனர்.இன்றுவரை அழைத்து செல்லவில்லை.ஒருசிலர் ஒருபடி மேலே சென்று காலநிலை சீர்கேடால் பள்ளி உடைக்கப் பட்டதாக சொன்னார்கள்.இலங்கை முஸ்லிம்கள் ஒன்றும் மோடையர்கள் அல்ல இதை நம்புவதற்கு.
அண்மையில் கருமலையூற்று பள்ளியை பொது மக்களிடம் கையளிக்கப் பட்டதாக முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள்.ஆனால் அங்கு என்ன நடந்தது பள்ளிக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு வெறும் தகர கொட்டிலை எங்களிடம் தந்துள்ளார்கள்.அங்கு பள்ளி மட்டும் அழிக்கப் படவில்லை எமது பாரம்பரியம் அழிக்கப் பட்டுள்ளது பள்ளியை கட்டிக்கொள்ள எங்களுக்கு தேறியும்.ஆனால் எமது கலாச்சாரம்…… அன்று புலிகளால் கஷ்டப்பட்ட மக்கள் இன்று அரசாங்கத்தால் கஷ்டப்படுகிறார்கள்
இவ்வனைத்து பிரட்சினைகளுக்கும் தீர்வு பெற்று தருகிறோம் என தற்போது நாடகமாடி யானைப் பசிக்கு சோளப்பொறி போல் ஏதோ செய்கிறார்கள்.இவ்வனைத்து சலுகைகளும் தீர்வுகளும் தேர்தலை அடிப்படையாக கொண்டு செய்யப் படுகிறது.அவர்கள் வெற்றி பெற்ற பின் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மாதம் 9 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ள எமது ஆட்சியில் உங்கள் காணி ,கடல் தொழில் உட்பட அனைத்து பிரட்சனைகளும் தீர்க்கப்படும்.நீங்கள் அனைவரும் எமது ஆட்சியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கலாம்.இந்த ஜனாதிபதி தேர்தலானது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டுகுமே கிடைத்துள்ள சந்தர்ப்பமாகும் இச் சந்தர்பத்தை தவறவிடின் இன்னும் 8 வருடங்களுக்கு இந்த கொடுங்கோல் ஆட்சியை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்