Breaking
Sat. Jan 11th, 2025
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இஸ்லாமியர்கள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு காப்பாற்றினர். பின்னர் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு வழங்கினர்.

அப்போது ஒரு முதியவர் இதே இஸ்லாமியர்களுக்கு அன்று நான் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்றேன்,

ஆனால் இன்று அதே இஸ்லாமியர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மீட்டு பள்ளிவாசலில் தங்க வைத்து உணவு கொடுக்கிறீர்கள் என்று கண்களில் கண்ணீர் மல்க கூறினார்.

இன்று என் குடும்பம் உயிர் பிழைக்க அல்லா தான் உங்களை அனுப்பியுள்ளார் என்று அவர் கூறிய காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.

திவ்ய தர்ஷினி
நாங்கள் வசிக்கும் அடையார் சாஸ்திரி நகரில் இது வரை எந்த அரசு அதிகாரிகளோ,அரசியல்வாதிகளோ வந்து பார்க்கவில்லை …ஆனால் நேற்று சிலர் எங்க தெருவுக்கு தண்ணீரில் நீந்தி வந்து ஒவ்வொரு வீட்டுக்கும் உணவு கொடுத்து விட்டு சென்றார்கள்.அவர்கள் முஸ்லிம் பாய் என்பது மட்டும் தெரியும் . .. அவர்களை இதற்க்கு முன் நான் பார்த்தது கூட இல்லை …அவர்களுக்கு கோடான நன்றி.
435730-chennai-floods
12316390_565007070325114_7314175308605907428_n

By

Related Post