– நிஷவ்ஸ் –
எங்கட ராத்தாமார் உடுக்கிற அபாயா
என்னென்று சொல்வதடி
கண்ணாடி சீகுயின்ஸ் கன்றாவி டிசைனகள்
கண்ணுக்குள் குத்துதடி
அஞ்சாறு அபாயாக்கள் பெருநாளைக்கு
அள்ளுறார் நியாயமாடி
பிஞ்சுக்கு கவுண் வாங்கக் காசில்லா
பெற்றோரும் உள்ளாரடி
நெஞ்சையும் உடம்பையும் நெருக்கி இறுக்கி உடுக்கின்ற அபாயாக்கள்
இது ஹிஜாபா இல்லை நடிப்பா அடி மார்க்கத்தை மலிவாக்கிறார். (அடி..)
போட்டிக்கு விலை கொடுத்து வாங்குகிறார்
காட்டிக் கலர்ஸ் போட
மாட்டிட்டு முழிக்கின்றார் சில கணவர்
மாட்டுக்கு புரியலைன்னு
கார்ட்டுக்கும் கடனுக்கும் கனக்க விலை கொடுத்து படம் காட்ட வாங்கிய பின்
கடன் கட்ட அவன் பட்டான் அடி சிலருக்கே இது பொருந்தும் (அடி)