Breaking
Thu. Dec 26th, 2024
முந்தனை ஆறு , மூக்கிரையான்ஓடை , விலால் ஓடை அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று  25.09.2019 மாவட்ட  மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பணிப்பாளர் நாயகம் நீர்ப்பாசனம் மோகன்ராஜ், முந்தயன் ஆறு திட்டப்பணிப்பாளர் சமன், பிரதி பணிப்பாளர் நிஹால் ஸ்ரீவர்த்தன, மாவட்ட பணிப்பாளர் அஸ்ஹர், நீர்பாசன  அதிகாரிகளும் மற்றும் கமநல சேவை திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 05.10.2019 ஆம் திகதி இவ் மூன்று திட்டங்களுக்குமான 15241 மில்லியன் செலவில் அடிக்கல் நடப்படவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Post