Breaking
Mon. Dec 23rd, 2024

ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் எளிதாக பணம் எடுப்பதற்கு, வங்கிகள் வசதி செய்து கொடுத்துள்ளது போல, ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனையும் ஒரு சில நாடுகளில் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் தங்கம் விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அபுதாபியில் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனை தொடங்கியது.

ஆன் -லைன் மூலம் தங்கம் விற்பனை செய்துவரும் ஜெர்மனியைச் சேர்ந்த “எக்ஸ் ஓரியன்ட் லக்ஸ் ஏஜி’ நிறுவனம், தங்கம் விற்பனை செய்யும் ஏ.டி.எம்., இயந்திரத்தை தயாரித்துள்ளது. இதனடிப்படையில் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு 10 நிமிடமும் தங்கத்தின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிவிக்கும் இந்த இயந்திரத்தின் மேற்பகுதி முழுவதும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்த வணிகத்தை செய்து வருகின்றது.

அங்கிருந்து தருவிக்கப்படும் சொக்கத்தங்கத்தில் எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலின் அடையாள முத்திரை பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஓட்டலில் தங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களில் பலர் இந்த இயந்திரத்தில் தங்கம் வாங்கிச் செல்வதில் ஆர்வமாக உள்ளனர்.

Related Post