51 வது, 52வது, 53வது, 54வது, 55வது, 56வது, 57வது, 58 வது வேலைத்திட்டங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், கந்தளாய் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சட்டத்தரணி மதார் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, கந்தளாய் பிரதேசத்தில் 07 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தித் திட்டங்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
51 வது வேலைத்திட்டம் – பஷார் வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்
52 வது வேலைத்திட்டம் – ஆத்தோடை வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்
53 வது வேலைத்திட்டம் – குஞ்சா வீதி, 02 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்
54 வது வேலைத்திட்டம் – சின்னப்பொடியன் வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்
55 வது வேலைத்திட்டம் – அப்துல் காதர் வீதி, 0.61 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்
56 வது வேலைத்திட்டம் – நாராம்பிரான் வீதியின், 03 ஆம் குறுக்கு வீதி, புனரமைப்பு 250, 000.00 ரூபாவிலும்
57 வது வேலைத்திட்டம் – அல் தாரிக் வித்தியாலயத்தில், 0.5 மில்லியன் ரூபாவும் மதில் அமைப்புக்கும்
58 வது வேலைத்திட்டம் – அந்த நஜாத் அரபிக் கல்லூரி, 250,000.00 ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேல்தள பகுதி வேலைகளும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் கந்தளாய் பிரதேச சபை பிரதித் தவிசாளர் சட்டத்தரணி மதார் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர்கள் உட்பட பிரதேச பிரமுகர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.
(ன)