Breaking
Mon. Dec 23rd, 2024
59 வது, 60 வது, 61 வது  வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா நசார், வட்டார அமைப்பாளர்கள் சியான் PHI, சபீக் ஆசிரியர்,  கிண்ணியா நகர சபையின் மாஞ்சோலை வட்டார அமைப்பாளர் தாரிக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

59 வது வேலைத்திட்டம் – ரஜீத், 0.9 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

60 வது வேலைத்திட்டம் – உப்புகச்சிமடு பிரதான வீதி, 02 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

61 வது வேலைத்திட்டம் – அஹமட் ஒழுங்கை வடிகால் மற்றும் கொங்ரீட் வீதி அமைப்பதற்காக 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான ஹாரிஸ், மஹ்தி, நிசார்டீன் மாஞ்சோலை சேனை வட்டார அமைப்பாளர் நஷ்பு உட்பட அப்பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துசிறப்பித்தனர்.

(ன)

Related Post