Breaking
Tue. Jan 7th, 2025

17 வது , 18 வது, 19 வது , 20 வது, 21 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா, வட்டாரக் குழுத்தலைவர்களான சியான், முபாரிஸ், சபீக், மாஜித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மூதூர் பிரதேசத்தில் 05 வேலைத்திட்டங்கள் இன்று (22) அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

17 வது வேலைத்திட்டம் – உப்புகட்சி மடு வீட்டுத்திட்ட இடத்தில் மணல் நிரப்புவதற்கான வேலைத்திட்டம், 1.5 மில்லியன் ரூபாவிலும்

18 வது வேலைத்திட்டம் – ஆனைச்சேனை ராஜிட் 03 ஆம் குறுக்கு வீதி, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்ரீட் வீதியாகவும்

19 வது வேலை திட்டம் – பஹ்ரியா நகர் பள்ளிவாசல் வீதி, 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்ரீட் வீதியாகவும்

20 வது வேலைத்திட்டம் – உப்புகட்சி மடு வீதி, 02 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கொங்ரீட் வீதியாகவும்

21 வது வேலைத்திட்டம் – அரபா நகர் வீட்டு திட்டத்துகு மணல் நிரப்புவதற்கான வேலைத்திட்டம், 1.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும்

ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில் மூதூர் பிரதேச செயலாளர் தாஹிர், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ரிபாஸ், அகீதா ஆகியோர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

Related Post