Breaking
Sun. Jan 5th, 2025

22 வது , 23 வது, 24 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெசீலா, வட்டாரக் குழுத் தலைவர்களான நிஷ்மி, முஜாஹித் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஷாக்கின் நெறிப்படுத்தலில், தோப்பூர் பிரதேசத்துக்கான அபிவிருத்தி  வேலைத்திட்டங்கள் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

22 வது வேலைத்திட்டம் – அல்லைநகர் இக்பால் நகர், தர்ம கிணறு வீதி 02 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும்

23 வது வேலைத்திட்டம் – ஆஸாத் நகர் பிரதான வீதி, 1.5 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

24 வது வேலைத்திட்டம் – மதுரசா வீதி, 1.5 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

புனரமைப்பதற்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வேலைத் திட்டங்களில், மூதூர் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி அரபாத் மற்றும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ரிபாஸ், ஜெசீலா உட்பட முக்கியஸ்தர்களும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post