Breaking
Sun. Jan 5th, 2025

25 வது, 26 வது, 27 வது, 28 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக், முன்னாள் உறுப்பினர்களான பதுர்தீன், சல்மான் பாரிஸ், வட்டாரக் குழுத்தலைவர் நௌபல் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஷாக்கின் (நளீமி) பங்குபற்றுதலுடன், புல்மோட்டை பிரதேசத்துக்கான அபிவிருத்தி  வேலைத்திட்டங்கள் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அந்தவகையில், 

25 வது வேலைத்திட்டம் – புல்மோட்டை 1 மையவாடி வீதி புனரமைப்பு, 01 மில்லியன் ரூபாவிலும்

26 வது வேலைத்திட்டம் – ரஹ்மான் நகர் வடிகான் புனரமைப்பு, 01 மில்லியன் ரூபாவிலும்

27 வது வேலைத் திட்டம் – ஹமாஸ் நகர் உபைதுல்லா வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

28 வது வேலைத்திட்டம் – நாவலடி சந்தி வீதி, வடிகான் புனரமைப்பு, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில், புல்மோட்டை பிரதேச பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post