Breaking
Tue. Dec 31st, 2024

புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்ககண்டி, நிலாவெளி, இக்பால் நகர் பிரதேசங்களில் 06 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்.

29 வது, 30 வது, 31 வது, 32 வது, 33 வது, 34 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனா வட்டாரக்குழு தலைவர்களான நாஸிர், யூசுப், அஜ்னாஸ், அலாவுடீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க புடவைக்கட்டு, குச்சவெளி, இறக்ககண்டி, நிலாவெளி, இக்பால் நகர் ஆகிய பிரதேசங்களில், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் அபிவிருத்தி  வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

29 வது வேலைத்திட்டம் – புடவைக்கட்டு மையவாடி வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

30 வது வது வேலைத்திட்டம் – ஜாயா நகர், குறுக்கு வீதி, 01 மில்லியன் ரூபாவிலும்

31 வது வேலைத்திட்டம் – இறக்ககண்டி, பாடசாலை வீதி, 01மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

32 வது வேலை திட்டம் – கோபாலபுரம், பள்ளி வாசல் வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

33 வது வேலைத்திட்டம் – நிலாவெளி, அடம்போடை வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

34 வது வேலைத்திட்டம் – இக்பால் நகர், ஆக்குவத்தை, பள்ளிவாசல் வடிகான் புனரமைப்பு 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில், முன்னாள் பிரதேச சபை தலைவர் தௌபீக் உட்பட பிரதேச பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(ன)

Related Post