Breaking
Mon. Dec 23rd, 2024

சர்வதேச ரீதியில் புகழ் பூத்த அறிஞராக ஆய்வாளராக,ஆராய்ச்சியாளராக மிளிர்ந்து மக்கள் மனங்களில் இடம் பிடித்த முன்னாள் இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மறைவு குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக அன்னாரின்ன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் றிஷாத்  பதியுதீன் வெளியிட்டுள்ள தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னளாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தமிழ் பேசும் உலகுக்கு ஒரு உதாரண புருஷராக திகழ்ந்தவர்.தமது எழுத்துத் துறை முறை மூலம் பல்வேறு புதிய கண்டு பிடிப்புக்களுக்கு முகவரியினை பெற்றுக் கொடுத்தவர்.

குறிப்பாக இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளில் வாழும்,முஸ்லிம்களுக்கு நன்மதிப்பினை பெற்றுக் கொடுத்த அரசியல் தலைவர் என்பதை நல்லுலகம் இன்றும் நினைவு கூறிக்கொண்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்யுடிள்ள அமைச்சர் றிஷாத்  பதியுதீன், அன்னாரின் பிரிவால் துயருறும், இந்தியாவின் புத்தி ஜீவிகள் மற்றும் அவரது நன்மதிப்புக்குரிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாக அமைச்சர் றிஷாத்  பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை இலங்கையில் உள்ள இந்திய துாதரகத்தில் வைக்கப்பட்டுள்ள கலாம் தொடர்பான சிசேட அஞ்சலி புத்தகத்திலும் அமைச்சர் றிஷாத்  பதியுதீன் நாளை கையெழுத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post