Breaking
Mon. Dec 23rd, 2024

மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post