Breaking
Sun. Dec 22nd, 2024
மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை வேட்பாளருமான தோப்பூரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி வபாத்தான செய்தி எம்மை வேதனையடையச் செய்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளதாவது,
 
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை வேட்பாளருமான தோப்பூரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி வபாத்தான செய்தி எம்மை வேதனையடையச் செய்துள்ளது. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவனத்தை வழங்குவானாக!” என்று தெரிவித்துள்ளார்.

Related Post