இந்த நாள் எனக்கு மறக்க முடியாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதேதினத்தில் அரசை விட்டு வெளியேறி ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் செய்தியை வெளியிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒன்றாக இணைந்து அப் பம் சாப்பிட்டு விட்டு வரலாற்றுத் தீர்மான த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திகதியை நினைவு கூர்ந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எனக்கு சிறப்பான பின்புலம் கிடையாது. பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வன். ஆனால் எனது “நேர்மை” காரணமாக மக்கள் ஜனாதிபதி பதவியை வழங்கியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மாலபே “மாதிரி” பாடசாலையில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கடந்த வருட நிகழ்வை நினைவு கூர்ந்து உரையாற்றியுள்ளார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாக உங்களது பாடசாலை வைபவத்தில் கலந்துகொள்வது வரலாற்று நிகழ்வாக இருப்பது போன்று எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க மறக்க முடியாத நாளாகும்.
இன்று 21 ஆம் திகதி அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுடன் இணைந்து ஒன்றாக அப்பம் சாப்பிட் டேன். அடுத்த நாள் நவம்பர் 21 அரசாங்கத்தை விட்டு வெளியேறினேன். இது எனது அரசியல் வாழ்க்கையில் திருப்பு முனையான நாள். அன்றைய தினம் எனது “மனநிலையின்” செயற்பாடு எப்படி இருந்தது என்பதற்கு எனக்கே விளக்கமளிக்க முடியாத நிலை காணப்பட்டது.
எனவே அன்றைய மனநிலையை என் னால் தற்போது தெளிவுப்படுத்த முடியாது. அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நான் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றேன். பின்னர் அங்கிருந்து இவர்களோடு இணைந்து புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டேன்.
இன்று இல்லாமையும் வறுமையும் சமூகத்திற்குள் மனிதர்களால் வெற்றி கொள்வதற்கு எந்தவிதமான தடைக்கல்லாக அமைய வில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
நான் பொலநறுவை போன்ற கஷ்டப் பிரதேசத்தில் சாதாரண ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். “புழுதிகளுக்கு” மத்தியில் வெளிக்கிளம்பிய ஒரு அரசியல்வாதி.
எனக்கு சிறப்பான அரசியல் பின்புலமோ அல்லது பிரபுத்துவ குடும்பப் பின்னணியோ கிடையாது.ஆனால் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டேன். எனவே நாட்டு மக் கள் என்னை இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர்.
எனவே பிள்ளைகள் தமது வாழ்க்கையில் தரப்படுத்தும் போது ஒவ்வொரு தருணத்தி லும் அர்ப்பணிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளின் 24 மணித்தியாலத்திற்கான கால அட்டவணையை தயார் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறானதோர் நிலையில் உங்கள் முன் உள்ள சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றும் ஜனா திபதி தெரிவித்துள்ளார்.