Breaking
Thu. Jan 16th, 2025
பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக குறித்த தோட்ட நிர்வாகத்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் அப்பிரதேசதத்தில் இருந்து மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துமாறு கூறியிருந்ததாக பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார்.
பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் புதன்கிழமை(29) பாரிய மண்சரிவு ஏற்றப்பட்டுள்ளது. இந்த மணிசரிவில் சிக்கி பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.
குறித்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு தோட்டநிர்வாகத்துக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் அப்பிரதேசத்தில் வாழும் மக்களை வேறு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருந்தும் இந்த  எச்சரிக்கையினை அலட்சியப்படுத்தியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட் பிரதேசத்திற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுளனர்.
அத்துடன் முப்படையை சேர்ந்த இராணுவத்தினரும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Related Post