Breaking
Fri. Nov 15th, 2024

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் அவர்களின் மறைவு, தமிழ் பேசும் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“சிவா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அமரர் சிவா சுப்பிரமணியம், எழுத்துத் துறையிலே தடம் பதித்தவர். பத்திரிகை உலகிலே அவர் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். சிறந்த பத்தி எழுத்தாளராக இருந்து தனது கருத்துக்களை நாசூக்காக வாசகர் மத்தியில் பதியச் செய்வதில் வல்லவராக இருந்தார்.

எழுத்தாளன் ஒருவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மற்றைய எழுத்தாளர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டிய அவர், கவிதைத் துறையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சிங்கள, ஆங்கில மொழிகளிலும் நல்ல பரிச்சயம் கொண்ட அவர், தான் சரியென நினைத்தவற்றை எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.

அமரர் சிவா சுப்பிரமணியத்தை பல விழாக்களில் நான் சந்தித்திருக்கின்றேன். அவருடன் உரையாடிய போதெல்லாம் மிகவும் ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்துவார். எப்போதும் புன்முறுவலுடன் இருக்கும் அவர் சிங்கள, தமிழ், முஸ்லிம் உறவுக்காக தனது  எழுத்துக்களைப் பயன்படுத்தியவர். அன்னாரின் மறைவுக்காக நான் வருந்துவதோடு, அவரது குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.

By

Related Post