Breaking
Mon. Dec 23rd, 2024

– அபூ செய்னப் –

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்த முறையற்ற விதத்தில் ஆற்றுமண் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தேவையான மண்ணை பெற்றுக் கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அபிவிருத்தி குழுக்களும் பெரும்பாலும் அதிக தொகை பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது இதற்கான அடிப்படைக்காரணம் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் மணல் அகழும் முகவர்கள் அதிக பணதிற்க்கு வெளி மாவட்டங்களுக்கு மணல் விற்பனை செய்வதாக பாதிக்கப்பட்ட பொதுமக்களினால் குற்றம் சாட்டப்பட்டது இது தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்று 13.11.2015  வெள்ளியன்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ.அமீர் அலி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்களான திரு அமல், திரு ஸ்ரீநேசன்,அலி சாஹிர் மவுலானா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ,பிரதேச செயளாலர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் இன்னும் கனியவள திணைக்களத்தின் அதிகாரிகள்,பொலிஸ்  திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள அனுமதி பத்திரம் வைத்துள்ள முகவர்களின் சீர்கேடுகள் பற்றிய வாத விவாதங்கள் முன் வைக்கப்பட்டன , அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு , சில அரச அதிகாரிகளின் அங்கீகாரம் என்பனவே இத்துறையில் முறைகேடு நடப்பதற்கான காரணம் என அதிகாரிகள் சிலர் கூறினார்கள், 

By

Related Post