Breaking
Sun. Dec 22nd, 2024

மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கூறியுள்ளார்.

டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமீர்கான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்படி பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, நாட்டில் மதத்தின் பெயரால் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவுள்ளதாகவும், ஒரு இந்திய குடிமகனாக என்னால் அதனை மறுக்க முடியாது என்றும் அமீர்கான் நேற்று கூறியிருந்தார்.

ஐ.எஸ் அமைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், அப்பாவி மக்களை கொல்பவர் முஸ்லீமே அல்ல என்பதில் தான் உறுதியாக உள்ளதாக கூறினார்.

By

Related Post