Breaking
Mon. Dec 23rd, 2024

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கேணிநகர், ஆலங்குளம் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கேணிநகர் கலாசார மண்டபத்தில்இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அமைச்சினால் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்களான கச்சான் 36 பேருக்கும், சோளம் 14 பேருக்கும், மேசன் உபகரணம் 18 பேருக்கும், மண்வெட்டி 107 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.அ.அமலினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.சுபோஸ், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.றிஸ்மின் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Related Post