மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் வன்முறை அரசியல் கலாசார நடவடிக்கைகளை தவிர்த்து தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாக பாராளுமன்ற தேர்தலினை நடாந்த வேண்டும் என்ற முனைப்புடன் உறுதியாக மக்கள் மணதினை வென்று கல்விமாண்கள்’,உலமாக்கள், பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று வன்முறையற்ற சிறந்த அரசியல் நடவடிக்கையில் பிரதியமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளா் அமீா் அலி ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
வாழைச்சேனையில் இடம் பெற்ற பிரதியமைச்சா் அமீா் அலியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சரின் வாகணத்தை இலக்கு வைத்து ஏறியப்பட்ட கல் நாவலடியை சேர்ந்த பரீட் என்பவரின் தலையில் விழுத்து பாரிய காயங்களை உன்டு பன்னியது.
இது போல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த அமைச்சரின் ஆதரவாளரை வைத்திய சாலையில் புகுத்து தாக்கியமை,மீராவோடையில் அமையப்பெற்றிருத்த பிரதியமைச்சா; அமீர் அலியின் தேர்தல் பிரச்சார காரியாலயத்தினூல் அத்துமீறி உள்நுழைத்து காரியாலயத்திற்கு ஓயில் வீசி நாஷப்படுத்தியதுடன் அன்று அங்கு கூடியிருத்த அமீா் அலியின் ஆதரவாளா்கள் மீது வேட்பாளா் ஒருவரின் குழுவினரால் பாரிய தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது.
இது நள்ளிரவு 12.05 மணியளவில் மீராவோடை பொது சந்தை கட்டிடத்தொகுதியில் உள்ள காரியாலயத்தில் இந்நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
இதனால் தலையில் பாரிய காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட மீராவோடையினை சேர்ந்த அப்துஸ்ஸலாம் பைறூஸ் வயது 36 என்பவரும் எம்.எல்.பௌஸான்-26 என்பவரும் தொடந்தும் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குறிப்பிட்ட ஒரு வேட்பாளர் தலைமையில் கல்குடா பிரதேசத்தில் அரங்கேரி வரும் அடாவடித்தனமான அரசியல் கலாசாரம் நிறுத்தப்படவேண்டும் என மீராவோடை பொது மக்கள் பலர் தமது முழுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.