Breaking
Sat. Dec 21st, 2024

– எம்.ரீ.எம்.பாரிஸ் –

இலங்கையின் நல்லாட்சிக்கான அரசியல் பயனத்தில்அமீா்அலி அரசியல் ரீதியிலான சமயோசிந்த முடிவுகள்சிறப்பானதாக அனைவராலும் குறிப்பாகசிறுபான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம்மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினைபெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறுவேலைத்திட்டங்கள் முன்னொடுக்கப்பட்டு வந்தது.

2010ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமீா்அலி தோல்வியடைந்தாலும் 2014ஆம் ஆண்டு இந்நாடுபாரியதொரு தேர்தலை எதிர்நோக்கியது அது தான்ஜனாதிபதி தேர்தலாகும்.
இந்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனதுஇருப்பை பாதுகாத்து கொள்ள தேசிய பட்டியல் மூலம்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அமீா் அலிக்குவழங்கினார்.

மஹிந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மை இனத்தவர்களுக்குகுறிப்பாக முஸ்லிம் மக்களுக்கும் இழக்கப்பட்டஅநீதிகள்தொடர்பில் சரியான நேரத்தில் சரியான முடிவுஎடுக்க வேண்டிய நிலைக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள்சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலைஏற்பட்டது.

தமது உயிரை துச்சமாக மதித்து இந்த நல்லாட்சிக்கானபோராட்டத்தில் ஒரு சிறப்பான முடிவினை அகில இலங்கைமக்கள் காங்கிரசின் தலைவரும்,அதன் தவிசாளரும்எடுத்துக்கொண்ட தீர்மானம் இந்த நாட்டு முஸ்லிம்களைமாத்திரம் அல்ல அனைத்துலக தமிழ் பேசும் மக்களையும்பெரும்பான்மை இனத்தவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மஹிந்த மீண்டும் ஜனாதிபதியானால் காலிமுகத்திடலில்குழிதோண்டி புதைக்கப்படுவேனோ ? என்ற  அச்ச நிலைக்கு பிரதியமைச்சா் அமீா் அலி மஹிந்தவின் கோபத்திற்குஆளானார். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்பதவியை பெற்று ஒரிருநாட்களில் எமது மக்களின்நியாயமான கோரிக்கைகளுக்காகவும் இந்நாட்டில்நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக மைத்திரியைஆதரித்தார்.

அவா் எடுத்துக்கொண்ட தீர்மானம் சிறப்பானதாகவும்வெற்றியை தீர்மானிக்கும் முடிவாகவும் காணப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

எது எவ்வாறானாலும் நடைபெற்று முடிந்தபாராளுமன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டுஇனஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்குமான பயனத்தில்
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் முழு ஆதரவுடன்மாவட்ட அரசியல் வரலாற்றில் அனைத்து இனமக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அரசியல்வாதியாக யாரும் எதிர்பார்த்திடாத வகையில் தீடிர் திருப்புமுனையாக வெற்றி பெற்று இன்று
கிராமியக் கைத்தொழில் பிரதியமைச்சராகபதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரின் இனஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்குமானபணிதொடர வாழ்த்துகின்றோம்.

Related Post