பிலிப்பைன்ஸின் தென் பகுதியிலுள்ள அமெரிக்கப் படையினர் வெளியேற வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளார்.
தென் பகுதியிலுள்ள படையினர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்ற அமெரிக்க சிறப்பு படையினர் இருப்பது, நிலைமையை இன்னும் மோசமாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியிலிருந்து முதன்முதலாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரொட்ரிகோ டுடெர்டோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் மற்றும்
கம்யூனிஸ்ட் போராளிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
இவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதல் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக அவரது நிர்வாகம் தொடுத்து வரும் வன்முறைத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது.
இதனையடுத்து அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை கடுமையான சொற்களால் விமர்சித்த டொட்ரிகோ டுடெர்டே, பின்னர் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.