Breaking
Sun. Dec 22nd, 2024

மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்று கூறியுள்ள அவர், முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது போன்ற பேச்சுகள் தன்னை தீவிர அரசியலில் வலுகட்டாயமாக ஈடுப்பட தூண்டும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில் இறங்கினால் அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன் என்று சுமித் கூறியுள்ளார்.

வில் சுமித் தன்னம்பிகை என்ற வார்த்தையின் உயிர்வடிவமாக பார்க்கப்படுபவர். எனவே அமெரிக்காவின் அடுத்த கருப்பின ஜனாதிபதி வில் சுமித் இருப்பதற்கான அனைத்து சாத்தியமும் உள்ளது.

By

Related Post