யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை. தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உள்ளக போர்க்குற்ற விசாரணையானது அமெரிக்காவின் சதித்திட்டமாகும். இது நாட்டுக்கு ஆபத்தானது என சிரேஷ்ட ராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மற்றபடி போர்க்குற்ற விசாரணைகள் இதற்கான பரிகாரமாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.குறித்த செவ்வியில் அவர்தொடர்ந்து கூறியுள்ளதாவது,உலகின் எந்தவொரு நாடும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை அளித்த வரலாறு இல்லை. அவ்வாறு விசாரணை நடத்திய நாடுகளும் பல வருடங்கள் கழிந்த பின் ஒப்புக்காகவே போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தன.
இவ்வாறான செயற்பாடுகளினால் எந்தவொறு பயனும்இல்லை. யாரும்தண்டிக்கப்படுவதும் இல்லை.போர்க்குற்றங்கள் தொடர்பான விசார ணைகளுக்குப் பதிலாக குறித்த விடயங் கள் தொடர்பான ஞாபகங்களை காலப் போக்கில் மறக்கச் செய்யும் முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பான விடயங்களை தோண் டித் துருவாமல் காலங்கள் கடந்த பின்பு நடைபெற்ற தவறுகளுக்கு நியாயங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.அத்துடன் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். மற்றபடி போர்க்குற்ற விசாரணைகள் இதற்கான பரிகாரம் இல்லை.
தற்போதைய அரசாங்கம் மேற்கொள் ளவுள்ள உள்ளக போர்க்குற்ற விசாரணை யானது அமெரிக்காவின் சதித்திட்டமாகும். இது நாட்டுக்கு ஆபத்தானதாகும் என்று கூறியுள்ளார்.