Breaking
Mon. Dec 23rd, 2024

ஆலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியுள்ளார். அங்கு அழகான சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்தார்.

அப்போது அவரது காமிராவில் தற்செயலாக பறக்கும் தட்டு படம் சிக்கியது. இதனால் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த படத்தின் பறக்கும் தட்டு ஒன்று நியூயார்க் நகரில் வட்டமிடுவது போன்று உள்ளது. இந்த போட்டோவை பார்த்த 90 சதவீதம் பேர் இது உண்மையான பறக்கும் தட்டு என கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகை ரோவன் பிளாசர்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள இப்படத்துக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் விருப்பமும், 1,665 பேர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டோவை சிலர் சாளரத்தின் பிம்பம் எனவும், இது பறக்கும் தட்டு இல்லை எனவும் வாதிட்டு வருகின்றனர். ஆனால் பலர் இது போன்ற பறக்கும் தட்டு ஒன்றை ஏற்கனவே பார்த்துள்ளதாகவும் மீண்டும் அந்த வாய்ப்பு இந்த போட்டோ மூலம் தங்களுக்கு கிடைத்ததாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

By

Related Post