Breaking
Sun. Jan 12th, 2025

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் மறைந்திருக்கும் போராளிகளை அமெரிக்க ராணுவம் மற்றும் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தி வருகிறது.இந்த தாக்குதல்களில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைமையில் பாகிஸ்தானில் போர் நடைபெற்று வருகிறது. இதில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை அணு ஆயுத போருக்கு எதிரான நோபல் பரிசு பெற்ற மருத்துவர்கள் சங்கம் மற்றும் உலக சமூக நலனுக்கான மருத்துவர்கள் சங்கம் ஆகியவை சேர்ந்து வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்வு அறிக்கையில் மேலும் கூறியிருப்பது, 2004 முதல் 2013 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் 48,504 பொதுமக்கள், 45 ஊடகவியாளர்கள், பாதுகாப்பு படையை சேர்ந்த 5,498 பேர் உட்பட மொத்தமாக 81,325 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள், ஆட்சியாளர்கள் நினைத்து கொண்டிருப்பதைவிட 10 மடங்கு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Post