அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்தார்.
அமெரிக்க -இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.இதன் போது, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் அதிகாரிகளுக்கும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.இதில் விமானப்படை மேற்ரும் கடற்படையைச் சேர்ந்த 16 அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது “நாம் இங்கு மீண்டும் வர விரும்புகிறோம். ஏழாவது கப்பற் படையணியின் மேலும் கப்பல்களை கொண்டு வர விரும்புகிறோம்” என்று ஜோசப் ஓகொயின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 31ஆம்திகதி கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கப்பல், நேற்று இந்தியாவின் மும்பைத் துறைமுகத்தைச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.