Breaking
Sun. Sep 22nd, 2024
அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்  என்ற  14 வயது மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வந்தான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்கு வைத்தார். அதைபார்த்த அறிவியல் பயிற்றுவிப்பாலர் பாராட்டினார். ஆனால் மற்றொரு  பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி  பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார்.உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தது. காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர். பின்னர் விசாரித்து கடிகாரம் தான் தயாரித்துள்ளார் என்பதை அறிந்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர்.
இது குறித்து சிறுவன் அளித்த பேட்டியில் ‘ஒரு போலீஸ் அதிகாரியும், பிரின்சிபாலும், என்னை 5 போலீஸ் அதிகாரிகள் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள்’, மேலும், ‘ நீ குண்டு தயாரிப்பதற்காக இதை செய்தாயா’, என்று திரும்ப திரும்ப கேட்டார்கள் ஆனால், நான் திட்டமாக அதை மறுத்து என்னுடய நோக்கம் கடிகாரம் செய்வது தான் என்று கூறினேன். பின்னர் சிறைக்கழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டேன் என்றார்
உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய‌ மாணவ சிறுவன் அஹமது கைதானதை  கண்டித்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  டுவிட்டர் பக்கத்தில் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கூல் கடிகாரம், அகமதுவை. வெள்ளை மாளிகைக்கு அழைக்க விரும்புகிறது? நீங்கள் அறிவியல் போன்றவற்றில்  நாம் இன்னும் குழந்தைகள் ஊக்குவிக்க வேண்டும். அது அமெரிக்காவில் செய்யப்படுகிறது.
என கூறி இருந்தார்.
இந்த நிலையில்  அஹமது முகமத் தனது குடும்பத்துடன் தற்போது கத்தார் நட்டிற்கு குடிபெயருவதாக  தெரிவிக்கபட்டு உள்ளது.ர
இது குறித்து குடும்பத்தினர் கூறும் போது
அகமதின் இண்டாம் நிலை படிப்பு மற்றும் பட்டப்படிப்புக்கக கத்தார் நாடு முழு உதவி தொகை அளிப்பதாக் கூறி உள்ளது. இதை தொடர்ந்து நாங்கள் அங்கு இடம் பெயர்கிறோம் என அவரது குடும்பம் கூறி உள்ளது.

By

Related Post