அமெரிக்கா, ஒக்லஹாமா மாநிலத்தில், டல்சா எனும் பிரதேசத்தில் பிரபல ஆடை விற்பனை நிறுவன நேர்முகப் பரீட்சைக்கு (2008) ஹிஜாப் அணிந்து சமூகமளித்த 17 வயது முஸ்லிம் பெண்ணொருவருக்கு ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது.
ஏழு வருட போராட்டத்தின் பின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு குறித்த நிறுவனம் ஏற்கனவே தமது ஊழியர்கள் இருவரை ஹிஜாப் அணிந்தமைக்காக இடைநிறுத்திய விவகாரத்தில் தலா 71,000 டொலர் நஷ்ட ஈடு வழங்கி சமரசம் செய்திருந்தமையும் குறித்த ஹிஜாப் போராட்டத்திற்கு சீக்கிய, யூத மற்றும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்பும் ஆதரவளித்து வந்துள்ளமையும் அமெரிக்க அடிப்படை உரிமைகள் சட்ட மீறலாகக் குறிப்பிடப்பட்டே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.