Breaking
Sun. Dec 22nd, 2024

“2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் எமது தரப்பில் 13% அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 (US Trade Show 2015) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

எனக்கு கீழ் உள்ள வர்த்தக திணைக்களத்தின் படி அமெரிக்காவுக்கான, இலங்கையின் இன்றைய வருடாந்த தேசிய ஏற்றுமதியில் 25% உலக தரத்திலான ஆடை ஏற்றுமதியாகும். மொத்த ஏற்றுமதி 73% ஆகும். இதில் சில இறப்பர் உற்பத்திகளும் உள்ளடங்கும்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் உள்ள புதிய அரசாங்கம், உலக முதலீட்டாளர்களுக்கு திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைகள் மூலம் போட்டி சூழலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும்.

புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பகுதியாக, ஊக்குவிப்பு வளையங்களை உருவாக்குவதன் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்கள் உற்பட சர்வதேச முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்ய முடியும். உலக சந்தையில் இருப்பு மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க இது ஒரு முக்கிய முயற்சியாகும். புதிய உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இலங்கை 73 வது இடத்தில் உள்ளது. உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதே எமது அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் ஆகும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷப் உற்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post