சிறுவர் மற்றும் சிறுமிகளை வைத்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அமெரிக்க தம்பதிகளிற்கு அமெரிக்க நீதிமன்றம் 1500 வருடங்களுக்கும் மேல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சமீப காலத்தில் வழங்கப்பட்ட மிக அதிக வருடங்கள் கொண்ட சிறைத்தண்டனை தீர்ப்பு என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள Lauderdale County என்ற பகுதியை சேர்ந்த Patricia Ayers என்ற பெண்ணும், அவருடைய கணவர் Matthew Ayers என்பவரும் சேர்ந்து சிறுவர், சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இணையத்தளங்களில் விற்பனை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவின் சைபர் க்ரைம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தம்பதியினர் மீது 53 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், இந்த குற்றத்தை புரிந்த Patricia Ayers அவர்களுக்கு 1590 வருடங்களும், அவருடைய கணவர் Matthew Ayers அவர்களுக்கு 750 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை L. Scott Coogler என்ற அமெரிக்க நீதிபதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.