Breaking
Mon. Dec 23rd, 2024

ஐ.நா.மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் பணி­களில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு பெறும் வகையில் இந்­தியா, சீனா உள்­ளிட்ட நாடு­க­ளுடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்­றது என்று அரச தொழில் முயற்­சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

சர்­வ­தேச தரத்­துடன் கூடிய உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைக்­கான கதவு தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அமெ­ரிக்கா பிரே­ர­ணைக்கு பல நாடு­களின் ஆத­ரவு கிடைப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐ.நா.வின் மனித உரிமை பேர­வையில் எதிர்­வரும் 24 ஆம் திகதி அமெ­ரிக்­கா­வினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள பிரே­ரணை தொடர்பில் வின­விய போதே பிரதி அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கையில்,

விடு­தலை புலி­க­ளு­ட­னான போரின் இறுதி கட்­டத்தின் போது பாரி­ய­ள­வி­லான மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இது குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்­பு­ட­னான கலப்பு நீதி­மன்­றத்தை கட்­ட­மைத்து அத­னூ­டாக உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் என ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்யத் ஹூசைன் வௌியிட்ட அறிக்கை குறிப்­பி­டுப்­பட்­டுள்­ளது.

மேற்­படி சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளு­ட­னேயே குறித்த கலப்பு நீதி­மன்றம் நிறு­வப்­ப­ட­வேண்டும் என்று அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இருந்­த­போ­திலும் உள்­ளக பொறி­மு­றை­யி­னூ­டாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். இலங்கை என்­பது சுய­நிர்­ண­ய­மிக்க நாடாகும். அதனை கொண்டு எமது வேலைத்­திட்­டங்­களை நாம் செயற்­ப­டுத்த வேண்டும்.

ஆகவே அர­சாங்கம் என்ற வகையில் எமது வேலைத்­திட்­டத்தை நாம் சர்­வ­தே­சத்­திற்கு முன்­வைக்க வேண்டும். தற்­போது இது இது தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்து நாட்­டிற்கு உகந்த தீர்­மா­னத்தை எடுக்கும் நேர­மாகும். இந்த தருணம் சர்­வ­தேச நாடு­க­ளு­டனும் நாட்­டி­லுள்ள அர­சியல் கட்­சி­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடும் நேர­மாகும். உள்­ளக பொறி­மு­றையை எவ்­வாறு கட்­ட­மைப்­பது என்­பது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டி­யுள்­ளது.

ஆகவே அர­சாங்கம் என்ற வகையில் உள்­ளக பொறி­மு­றையை எவ்­வாறு கட்­ட­மைப்­பது என்­பது தொடர்பில் பேசு­வ­தற்கு கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச அச்­சு­றுத்­தல்­க­ளி­ருந்து நாட்டை பாது­காக்க வேண்டும். சுய­நிர்­ண­ய­மிக்க நாட்டை பாது­காப்­ப­தனை கொண்­டுதான் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடியும்.
இதற்­க­மைய அனைத்து தரப்­பி­னரும் அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். முன்­னைய ஆட்­சி­யினர் விட்ட தவ­று­களை புதிய அர­சாங்கம் திருத்த வேண்­டி­யுள்­ளது. ஆகவே பேச்சு வார்த்­தைக்கு வாருங்கள்.

மேலும் எதிர்­வரும் 24 ஆம் திகதி அமெ­ரிக்­கா­வினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள இலங்­கைக்கு ஆத­ர­வான பிரே­ர­ணைக்கு ஆத­ரவு திரட்டும் வகையில் திற­மை­வாய்ந்த எமது ெவளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சமரவீர காத்திரமான பங்களிப்பினை செய்து வருகின்றார்.

அத்துடன் இந்த பிரேரனைக்கான சீனா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவினை திரட்டுவதில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக இருந்தபோதிலும் அதற்கு சர்வதேச தரத்தை கொண்ட பொறிமுறையொன்றை நிறுவுவதில் அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

Related Post