Breaking
Sun. Dec 22nd, 2024

ஈராக் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தை மூடி விட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் கொண்டு வந்த தீர்மானம், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதுயுதீனின் பலத்த எதிர்ப்பு காரணமாக இன்று கைவிடப்பட்டது. போர்க்கால நெருக்கடியினால் ஈராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்தத் தூதரகத்தை மூடுவதற்கான தீர்மானத்தை அமைச்சர் மங்கள கொண்டுவந்த போது அமைச்சர் றிசாத் ஆவேசத்துடன் குறுக்கிட்டு, இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டிருந்தால், இங்கு இப்போது எந்தத் தூதரகமும் மிஞ்சி இருக்காது என்று சுட்டிக்காட்டினார்.

நீங்கள் இஸ்ரேல் தூதரகத்தை இங்கே கொண்டு வந்துவிட்டு, அரபுலக நாடுகளின் தூதரகங்களை படிப்படியாக மூட எத்தனிக்கின்றீர்களா? என கிளர்ந்தெழுந்தார்.

தனது கருத்துக்களை ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் அமைச்சரவையில் முன்வைத்த அமைச்சர் றிசாத், ஈராக் நாடு போர்க்காலத்திலும், போர் முடிவுற்ற

பின்னரும் செய்த மனிதாபிமான உதவிகளை இவ்வளவு விரைவாக மறந்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பினார்.

அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க இடையில் மறைத்து,

வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார கொள்கை தொடர்பில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நீங்கள் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கின்றீர்கள் எனக் கூறிய போது, அமைச்சர் றிசாத் இந்த முயற்சிக்கு நான் 100 சதவீதம் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் என்று வெளிப்படுத்திவிட்டு, தூதரகத்தை வேண்டுமானால் மூடுங்கள் என ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

அமைச்சர் றிசாத்தின் பலத்த எதிர்ப்பு காரணமாக தூதரகத்தை மூடும் யோசனை

கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஈராக் தொடர்பில் அமைச்சர் றிசாத்தின் கருத்துக்களுக்கு டாக்டர் ராஜித

சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, தளதா அத்துக்கோரள, பைசர்

முஸ்தபா போன்றவர்கள் ஆதரவளித்து கருத்து வெளியிட்டதாகவும் செய்திகள்

தெரிவிக்கின்றன.

By

Related Post